Malayankulam
திருநெல்வேலி : மூன்றடைப்பை அருகே உள்ள மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா கோலாகலமாக நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு என்னும் கிராமத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் கிழக்காக அமைந்துள்ள அமைதியான சிற்றூர், மலையன்குளம்.
மலையன்குளம் அருள்மிகு இசக்கியம்மன் கோவில் கொடைவிழா ஆகஸ்டு 14 வியாழன், 15 வெள்ளி , 2014 கோலாகலமாக நடந்தது.விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தன.
பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அம்மனை வழிபாடு செய்த வண்ணம் இருக்கிறார்கள். பக்தியுடன் அம்மனின் பெயரைக் கூறி வரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. இது மற்ற இடங்களில் காண இயலாத வித்தியாசமான சிறப்பு.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியார் செய்திருந்தனர்.வெள்ளிகிழமை மதியம் அன்னதானமும இரவு பொழுதுபோக்கு நிகழ்சிகளும் வானவேடிக்கையும் நடைபெற்றது. விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கொடைவிழா கண்டு வியந்து போனேன்
ReplyDeleteதென்னாடுடைய சிவனே போற்றி
ReplyDeleteஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
காவாய்க் கனக கழலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி