Contact Form

கார்த்திகை பொங்கல் விழா 2021 - Karthikai pongal vizha-malayankulam-2021

   உலகெல்லாம் புகழ் பெற்ற உத்தம தெய்வம் நமது மலையன்குளத்திலே பன்னெடுங்காலமாக வீற்றிருக்கும் நமது அன்னை ஸ்ரீ இசக்கி அம்பிக்கைக்கு, 10-12-2021 கார்த்திகை கடைசி வெள்ளியை முன்னிட்டு  -கார்த்திகை பொங்கல் விழா 2021 வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.


     காலை 10  மணி முதல் பொங்கல் வைபவம் ஆரம்பமாகின்றது. 

 மதியம் 12 மணி அளவில் அம்பிகை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து மதியம் 01 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறும்.

  • குழந்தை  பாக்கியம் கிட்டவும்
  • திருமண பாக்கியம் கிட்டவும்
  • தொழில் வளர்ச்சி பெறவும்
  • கல்வி மற்றும் கலைகளில் குழந்தைகள சிறப்புறவும்
  • சகல சந்தானங்களும் பெற்று இன்புற்று வாழவும்

மலையன்குளம் இசக்கி அம்மனை தூய மனதோடு ஒருதரம் நினைத்தாலே போதும். பாவிக்கும் மனமிறங்கி அருள்புரியும் சக்தி இவள். தாயிக்கும் தாயாய் நமை காத்தருளும் தயாபரி எங்கள் மலையன்குளத்தால்..!



ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டு அம்பிகையின் பரிபூரண அருளுக்கு பாத்திரமாக வாழ்த்துக்கள்!


பேருந்து  பயணம் 

திருநெல்வேலி  புதிய பேருந்து நிலையத்திலிருந்து மலையன்குளம் பேருந்து நேரம்

காலை : 8.00 மணி (39 B தனியார் பேருந்து)

காலை :  08.15 மணி (39 M  அரசு பேருந்து)

காலை : 10.30 மணி ( 39 B தனியார் பேருந்து)

மலையன்குளத்திலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து நேரம்

மதியம்: 01.30 மணி (39 B தனியார் பேருந்து)

மதியம் : 03.00 மணி (39 M அரசு பேருந்து)

மதியம் : 04.00 மணி (39 B தனியார் பேருந்து)

பேருந்து தெய்வநாயகப்பேரி என்று போர்டு (board) வைக்கப்பட்டிருக்கும்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாங்குநேரி, வள்ளியூர் மற்றும்  நாகர்கோவில் செல்லும் பேருந்தில் வருபவர்கள் மூன்றடைப்பில் இறங்கி ஆட்டோவில் வரலாம்.. (end to end, byepass rider தவிர அனைத்து பேருந்துகளும் மூன்றடைப்பில் நின்று செல்லும்)..

No comments:

Post a Comment